Farm Info

Friday, 13 August 2021 08:44 PM , by: Elavarse Sivakumar

Credit : TreeHugger

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரியப் பருவத்தில் விதைப்பு செய்வதற்கு தேவைப்படும் தரமான சான்று பெற்ற விதைகளை வழங்கத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்ககச்சான்று உதவி இயக்குநர் பி.யாசோதா தெரிவித்துள்ளார்.

தரமான விதைகள் (Quality seeds)

விவசாயத்தில் மிக முக்கியமான ஒன்று, உரிய காலத்தில், விதைகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க வேண்டும். இதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் விதைப்பு செய்வதற்கு தேவைப்படும் தரமான சான்று பெற்ற விதைகளை வழங்க வேளாண்துறை பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

விதைப்பண்ணைகள் (Seed farms)

இதன் ஒருபகுதியாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் ஆய்வு (Officers inspect)

அவ்விதைப் பண்ணைகள் அனைத்தும் வளர்ச்சிப்பருவம், பூ பருவம் மற்றும் முதிர்ச்சி பருவங்களில் விதைச்சான்று அலுவலர்களால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவ்விதைகளின் தரம் உறுதிபடுத்தப்பட்டு வருகிறது.

எந்தந்தப் பகுதிகள் (Any areas)

அவ்வகையில், ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் பி.யாசோதா, கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் பாரியூர், அக்கரஹாரக்கரை மற்றும் பொலவகாளிபாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் வேளாண்மைத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விதைப் பண்ணைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். குறிப்பாக நெல்லில் அமைக்கப்பட்டுள்ள ASD16, ADT 37 மற்றும் TPS 5 ஆகிய இரக விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார்.

பரிசோதனை (Experiment)

இந்த ஆய்வில், விதைப்பண்ணைகளின் விதை ஆதாரம், பிற இரக விதைகள் கலப்பு, களை மற்றும் பூச்சிநோய் மேலாண்மை ஆகியவை இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது.

30 இரக விதைப்பண்ணை (30 Variety Seed Farm)

பின்னர், உற்பத்தியாளர்களுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்ய ஏதுவான தொழில்நுட்ப தகவல்களை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, சோளத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 இரக விதைப்பண்ணை பிற இரக பண்ணைகளிலிருந்து கலப்பு ஏற்படா வண்ணம் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

தற்போது சம்பா பருவம் தொடங்கிய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்து விதைப்பண்ணைகளிலும் தொடர்ச்சியாக வயல்களில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வின்போது, தரமான சான்று பெற்ற விதைகள் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விதைச்சான்று அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் படிக்க...

தொற்று நோய்க்கு மருந்தாகும் கற்றாழை-அசத்தல் பலன்களின் பட்டியல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)