மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, முற்றுகையிடச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தொடரும் எதிர்ப்பு (Continuing resistance)
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அலை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயச் சங்கங்கள் (Agricultural Associations)
அதுமட்டுமின்றி மேக தாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்வது என தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் சீர்காழி ஆகிய பகுதியை சேர்ந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை ஏற்கனவே அறிவித்திருந்தன.
ஊர்வலம் (Procession)
இந்நிலையில் விவசாயிகள் தங்களுடைய விவசாய சங்க கொடிகளை கையில் பிடித்தபடி மண்டபத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
தடுத்து நிறுத்திய போலீசார் (Detained police)
விவசாயிகளின் ஊர்வலம் 4 கிலோ மீட்டரை கடந்து சத்தியமங்கலத்தை அடுத்த கோம்புபள்ளம் அருகே சென்றபோது போலீசார் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் கைது செய்வதாக கூறினர்.
தர்ணாப் போராட்டம் (Protest)
இதனால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணாப் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரிடம் விவசாயிகள் கூறுகையில், தேர்தல் நடத்தும் அதிகாரி எங்களுடைய போராட்டம் தொடர்பாகத் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எனவே தேர்தல் நடத்தும் அதிகாரி இங்கு நேரில் வரவேண்டும் என்றனர்.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி ரவிசங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சமாதானப் பேச்சு (Peace talk)
அப்போது விவசாயிகளிடம் பேசிய அவர். உங்கள் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும் என்றார். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களுடைய தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தாக 170 விவசாயிகளை போலீசார் கைது செய்து அந்த பகுதி யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பி.ஆர். பாண்டியன் தகவல் (P.R. Pandian information)
இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 200 பேர் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் பகுதிக்குச் சென்று முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து சத்தியமங்கலத்துக்கு வந்தோம். இங்கிருந்து ஊர்வலமாகச் சென்று, பின்னர் ஊர்வலத்தின் முடிவில் வேனில் ஏறி கர்நாடக மாநிலம் செல்ல இருந்தோம். அதற்குள் போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டனர் என்றார்.
மேலும் படிக்க...
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முக்கிய பயிருடன் கலப்பு பயிரிடுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!
தமிழக காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா! - அதிக ரசாயன மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்!!
வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது!