கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவன் ம.பிரேம்குமார் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறையை பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது,
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையை தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும்.இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளிலிருந்து படியும். அதன்மேல், கேப்னோடியம் என்ற கரும்பூசணம் படர்கிறது. இதனால், ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இப்பூச்சிகள் தென்னை மட்டுமில்லாமல், வாழை, பாக்கு, சப்போட்டா, கரும்பு ஆகிய பயிர்களையும் தாக்குகின்றன.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7.00 முதல் 11.00 மணி வரை எரிய விட்டு, கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை, நிலத்தில் இருந்து 5 அடி உயரத்தில் கட்டலாம் அல்லது, மரத்தின் தண்டுப் பகுதியில், சுற்றி விடலாம். பாதிப்புள்ள மரங்களின் ஓலைகள் மீது தண்ணீரை விசைத் தெளிப்பான் வாயிலாக அதிக அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து, வெள்ளை ஈக்கள் மற்றும் முட்டைகளை அழிக்கலாம்.
உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, கிரைசோபெர்லா ஒட்டுண்ணிகள் ஏக்கருக்கு, 500 எண்ணிக்கையில் ஓலைகளின் அடிப்பகுதியில் கட்டினால், வெள்ளை ஈக்களின் புழுக்களை உட்கொண்டு அழிக்கும். காக்ஸினெல்லிட் பொறிவண்டு மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணிகளை ஓலையில் வைத்தால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும். தெளிப்பு முறையை கையாள விரும்பினால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 30 மி.லி., வேப்பெண்ணெய் அல்லது, 2 மி.லி., அசாடிராக்டின் கலந்து அத்துடன், 1 மி.லி., ஒட்டு திரவம் கலந்து ஓலைகளின் அடிப்பகுதியில் தெளிக்கலாம். மேலும், வெள்ளை ஈ பாதிப்புள்ள தோப்புகளில், பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இருந்தால், இயற்கை எதிரிகள் பெருகி, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
NBCC ஆட்சேர்ப்பு 2023 – 08 எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இதோ லிங்க்!
சேதத்தின் அறிகுறிகள் மற்றும் நோய் கண்டறிதல் :
- வெள்ளை ஈக்களின் நிம்ஃப்கள் மற்றும் பெரியவர்கள் துண்டுப் பிரசுரங்களின் கீழ் பரப்பில் உள்ள சாற்றை உறிஞ்சும்.
- பூச்சிகளுக்கு அதிக அளவில் உணவளிப்பதால் தேன் பனி வெளியேறும்.
இலைகளின் மேல் மேற்பரப்பில் வைக்கப்படுகிறது
- தேன் பனிக்கழிவு, இனிப்பு மற்றும் தண்ணீராக இருப்பதால், எறும்புகளை ஈர்க்கிறது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறதுகாப்னோடியம் எஸ்பி பூஞ்சை. இது புரவலன்களின் சிதைவை ஏற்படுத்துகிறதுதாவரத்தின் ஒளிச்சேர்க்கை திறன். இலையின் கீழ் மேற்பரப்பில் அதிக எண்ணிக்கையிலான வெள்ளை ஈக்களின் காலனிகள் இருக்கும்.
செய்முறை :
வெந்நீரில் மைதா மாவை சேர்க்க வேண்டும் , அதில் இருந்து நமக்கு மைதா பசை கிடைக்கும். 1 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மைதா பசையை தென்னை மரத்தில் தெளிப்பான் மூலம் தெளிப்பதால் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை நான் கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு: ம.பிரேம்குமார், இறுதியாண்டு வேளாண் மாணவன்.
மின்னஞ்சல்: premk786931@gmail.com முனைவர் பா.குணா, இணைப்பேராசிரியர், வேளாண் விரிவாக்க துறை, நாளந்தாவேளாண்மை கல்லூரி, எம்.ஆர்.பாளையம் திருச்சி.
தொலைபேசி எண் : +919944641459மின்னஞ்சல் : baluguna8789@gmail.com இவர்களை தொடர்ப்புகொள்ளவும்.
மேலும் படிக்க:
NBCC ஆட்சேர்ப்பு 2023 – 08 எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இதோ லிங்க்!