எலியை கட்டுப்படுத்த விஷ உணவு உருண்டைகள் செய்யும் சரியான வழி முறையை வெளியிட்டுள்ளது, வேளாண்மை-உழவர் நலத்துறை. இதில் கொடுக்கப்பட்ட வழி முறையை பின்பற்றி நிச்சயம் எலியை கட்டுப்படுத்த முடியும்.
தேவையானவை:
அரிசி குருனை | 400 கிராம் |
மாவு | 400 கிராம் |
நல்லெண்ணெய் | 100 மி.லி |
புரோமோடைலான் (அல்லது) ஜிங்க்பாஸ்பைட் | 100 கிராம் |
இப்பொருட்களை கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பயன்படுத்தி விஷ உணவு உருண்டைகளை தயாரித்து வயல்களில் பயன்படுத்துங்கள்.
வழிமுறை:
மேற்காணும் பொருட்களை ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக்க வேண்டும். இச்சிறு உருண்டைகளை வயலில் உள்ள துளைகளில் வைக்க வேண்டும். சிறந்த பயனை தர நஞ்சு கலக்காத உருண்டைகளை இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே வைக்க வேண்டும். பின்பு நஞ்சு உருண்டைகளை வைத்தால் எலிகள் அவற்றை தின்று இறந்துவிடும்.
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.
மேலும் படிக்க:
வேளாண் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்ற அரசு 50% மானியம்
தமிழகம்: SC தடையை மீறி அதிகரிக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரம்