Farm Info

Friday, 07 May 2021 11:06 AM , by: Elavarse Sivakumar

Credit : One india Tamil

காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறுவை சாகுபடி (Cultivation of curry)

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அணை திறப்பதில் சிக்கல் (Problem opening the dam)

ஆனால் சில ஆண்டுகளில் தேவையான அளவுத் தண்ணீர் அணையில் இல்லாத பட்சத்தில், தாமதமாக அணை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தண்ணீர் திறக்க உத்தரவு (Ordered to release water)

இந்த ஆண்டு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

சாகுபடி பணிகள் (Cultivation works)

மேலும், பாசன வடிகால்கள், கால்வாய்களைத் தூர்வார உடனடியாக நடவடிக்கை இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கான அடிப்படைப் பணிகளைத் தமிழக அரசுப் போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்.

கூடுதல் டிராக்டர்கள் (Extra tractors)

கோடை உழவு செய்வதற்கு வேளாண் பொறியியல் துறை மூலமாகக் காவிரி டெல்டா பகுதிக்கு கூடுதல் டிராக்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விலைப்பட்டியல்  (Invoice)

டிஏபி உள்ளிட்ட உரங்களின் விலையை இப்கோ நிறுவனம் உயர்த்தி அறிவித்தது. இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விலை உயர்வைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தாலும், உண்மையான விலைப்பட்டியல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இழப்பீடு வழங்கப்படவில்லை (No compensation was paid)

எனவே, மத்திய - மாநில அரசுகள் உரங்களின் விலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு 100 சதவீத இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், இழப்பீடு வழங்கப்படவில்லை.

கால தாமதம் (Time delay)

அதேபோல, விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ரூ.12,500 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இக்கடன்களுக்காக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்திருந்த நகைகளைத் திருப்பிக் கொடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

முதல்வருக்குக் கோரிக்கை (Request to the first)

எனவே விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)