1.ரேஷன் கடையில் விவசாயிகளுக்காக அறிமுகமாகும் 'மைக்ரோ' ஏ.டி.எம்
பயிர் கடன் பெறும் விவசாயிகளின் நலன் கருதி, முதல் கட்டமாக, தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளுக்கு, 'மைக்ரோ' ஏ.டி.எம், கருவிகள் வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் கடன் தொகையை எடுக்க, கூட்டுறவு சங்கங்களுக்கும், வங்கி ஏ.டி.எம்., மையங்களுக்கும் அதிக துாரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் பயன் பெறும் வகையில், முதல் கட்டமாக 500 தொடக்க வேளாண் கூட் டுறவு கடன் சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு, 'மைக்ரோ' ஏ.டி. எம்., எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
2.விதை தர மேம்பாட்டுத் தொழில் நுட்பங்கள் குறித்து கட்டணப் பயிற்சி
விதைப்பதற்கு முன் விதையின் தரத்தை மேம்படுத்துவது குறித்து பின்வரும் தொழில்நுட்பங்களில் விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையில் பிரதி ஆங்கில மாதம், 15ம் தேதி ஒரு நாள் கட்டணப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயப் பெருமக்கள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேரடி பதிவு வசதியும் உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்ச விதை அறிவியல் மற்றும் தொழில் நுடப்த்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்.
தொலைபேசி 0422-6611363 கைபேசி 9965066580/9442210145
3.புவிசார் குறியீடு: ஆத்தூர் வெற்றிலைக்கு மற்றுமோர் மணிமகுடம்!
தமிழகத்தில் புவிசார் குறியீடு பெறும் தனித்துவ பெருமைகளில் ஒன்றாக, ஆத்தூர் வெற்றிலையும் தற்போது இணைந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில், தாமிரபரணி பாசனத்தில் வளரும் வெற்றிலை 500 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலையின் தனித்தன்மைக்கு காரணமாகும், தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தால் கணிசமான காரத்தன்மையுடன், அதிக ஜீரண சக்தியுடன் இவை வரவேற்பு பெற்றுள்ளன. இதற்கு மத்தியில் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது, அப்பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கொளுத்தும் வெயிலால் கோழிகளுக்கு வரும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?
4.நில ஆவணங்களை அறிய மொபைல் ஆப்? அமைச்சர் அதிரடி அறிவிப்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் தாக்கல் செய்து வருகிறார். அதில் நில உடமைகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் எனவும், நில ஆவணங்களை அறிய புதிய செயலி உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இ-சேவைகள் குறித்த தகவல்களை அளிக்கும் பொருட்டு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்கத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
5.ராஜீவ் காந்தி சாலையின் படூரில் சுற்றுச்சூழல் பூங்கா தகவல் மையத்தின் (EPIC) முதலாம் ஆண்டு விழா
புதன்கிழமை ஒரு சிறிய மற்றும் உற்சாகமான நகர்ப்புற விவசாயிகளின் குழு ஒன்று சேர்ந்து விதைகள், அறிவு மற்றும் பிற வளங்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஒருங்கிணைந்தனர். ராஜீவ் காந்தி சாலையின் படூரில் சுற்றுச்சூழல் பூங்கா தகவல் மையத்தின் (EPIC) முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
6.ஆந்திராவில் இயற்கை விவசாயம் வழக்கமான விளைச்சலை விட அதிக விளைச்சலைக் கொடுக்கிறது என்கிறது ஆய்வு
ஆந்திரப் பிரதேசத்தில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் (ZBNF) கரிம அல்லது வழக்கமான (செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்) விவசாயத்துடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக பயிர் விளைச்சலுக்கு வழிவகுத்தது, மாநிலத்தின் இயற்கை விவசாயத் திட்டத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. யுனைடெட் கிங்டமின் ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் 2014 இல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இலாப நோக்கற்ற Rythu Sadikara Samstha ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், வழக்கமான சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, இயற்கை விவசாயத்தில் விளைச்சல் பராமரிக்கப்பட்டு ZBNF இல் அதிகரித்தது.
மேலும் படிக்க:
தோட்டக்கலைக்கு இந்த 10 தோட்டக்கலை கருவிகள் இருத்தல் வேண்டும்