பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் பால் வளத்தைப் பெருக்குவதற்காக வளர்க்கும் புல், கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படுகிறது.
இதனை வருடத்திற்கு 7 முறை அறுவடை செய்தவதன் மூலம் கூடுதல் வருவாயை ஈட்டமுடியும். சி.என். 4 ரகப்புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்குக் கொடுப்பதால் பால் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க முடியும்.
குறைந்த பரப்பில் அதிக மகசூல் (High yield in low area)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.
இந்தத் தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால், குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவனப் புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் எனக் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ முருகன் தெரிவித்துள்ளார்.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஓர் பல்லாண்டுத் தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான சாறு நிறைந்தக் குறைந்த நார்ச்சத்துக் கொண்டவை.
பூச்சி, நோய்கள் தாக்காது (Pests and diseases do not attack)
இவ்வகைப் பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் உள்ளிட்டவைத் தாக்காது. அதிக உலர் தீவனமகசூல், புரதச்சத்து கொண்டவை.
7முறை அறுவடை (Harvest 7 times)
ஆண்டுக்கு 7 முறை அறுவடை செய்யலாம்.இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறுவது நிச்சயம். கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்குத் தேவையான வைட்டமின் D எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை மேம்படுகின்றன. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்கவைப்பதற்கும் பாத்திவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.
சாகுபடித் தொழில்நுட்பம் (Cultivation technology)
-
ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம்.
-
நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும்.
-
நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செமீ இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
-
மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை ஓட வேண்டும்.
-
மண் பரிசோதனை செய்ய மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும்.
-
மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கியத் தொழு உரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால், மகசூலை நிலை நிறுத்தலாம்.
-
பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில், நன்கு நீர் பாய்ச்ச்சியப் பின்னர், தண்டுக்கரணையை 50 முதல் 60 செ. மீ இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
-
இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும்.
கரணை நட்ட 3வது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
-
பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
-
கரணையை நட்ட 20-வது நாள் களை எடுக்க வேண்டும்.
அறுவடை (Harvest)
நடவுக்குப் பின் 75 முதல்80 நாட்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம். இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால். ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 7அறுவடைகளில் 300 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம்.
எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது கோ (சிஎன்) 4 ரகப் புல்லை உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கிக்கொள்ள முடியும்.
நகர்புறங்களில் உள்ள விவசாயிகள் இந்த ரகப்புல்லை உற்பத்தி செய்து கிலோ 3ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இந்தப் புல்லின் தண்டுக்கரணைகளையும் உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
மேலும் படிக்க...
குறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!