சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23ஆம் சந்தை ஆண்டுக்கு சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரைவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
MSP
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக எள்ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 523 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பாசிப்பருப்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சூரியகாந்தி விதைகளுக்கு குவிண்டாலுக்கு 385 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லுக்கு
பொது ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 2040 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 'A' ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2060 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்திக்கான (Medium) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 6080 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீள பருத்திக்கு (Long) குவிண்டாலுக்கு 6380 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி
நிலக்கடலைக்கு குவிண்டாலுக்கு 5850 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...