Farm Info

Friday, 19 February 2021 03:37 PM , by: Daisy Rose Mary

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் வேளாண் துறையும் மெல்ல மெல்ல இயந்திரமயமாகி வருகிறது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏளானமான இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட நவீன வேளாண் இயந்திரங்களின் உத்தேசப் பட்டியலை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

இதில், பொள்ளாச்சி விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் என்னென்ன இயந்திரங்கள் உள்ளன, அவற்றின் உத்தேச விலை என்ன என்ற தகவலை வேளாண் பொறியியல் துறை வெளியிட்டுள்ளது. தேவையான விவசாயிகள் மாவட்ட வேளாண்துறை அலுவலகம் அல்லது அருகில் உள்ள வேளாண் அலுவகத்தில் கேட்டுபயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்களின் உத்தேச விலைப் பட்டியல் விபரம்

  • நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், மணிக்கு, 400 கிலோ கடலை உரிக்கும். உத்தேச விலை, 30 ஆயிரம் ரூபாய்.

  • கைகளால் இயக்கக்கூடிய நிலக்கடலை உரிக்கும் இயந்திரம், மணிக்கு, 200 கிலோ கடலையை உரிக்கும் திறன் கொண்டது. இதன் விலை, 6,000 ரூபாய்.

  • சோளம் பிரிக்கும் இயந்திரம், மணிக்கு, 25 கிலோ பிரிக்கும் திறன் கொண்டது. மற்ற சிறு தானியங்களிலும் பயன்படுத்தலாம். இதன் விலை, 25 ஆயிரம் ரூபாய்.

  • தக்காளி விதை பிரித்தெடுக்கும் கருவி, மணிக்கு, 180 கிலோ தக்காளியில் இருந்து விதைகளை பிரிக்கும் திறன் கொண்டது. விலை, 20 ஆயிரம் ரூபாய்.

  • மரவள்ளி கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டும் கருவி, மணிக்கு, 270 கிலோ கிழங்கை வெட்டும் திறன் கொண்டது. விலை, 15 ஆயிரம் ரூபாய்.

வேளாண் இயந்திரங்களை வாங்க விரும்புவோர்

தேவைப்படும் விவசாயிகள், பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்லலாம் என்றும், இந்த வகை வேளாண் இயந்திரங்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் மானிய விபரங்களை கேட்டு தெரிந்துகொண்டும், வாங்கியும் பயன்பெறலாம்.

மேலும் படிக்க...

கோடை வெயில் தாக்கம் துவக்கம்- இளநீர் விற்பனை அதிகரிப்பு!

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!

PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)