விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், திருப்பூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நவீனக் கொப்பரை உற்பத்தி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடி (Coconut cultivation)
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம், பச்சைப்பசேல் என தென்னை மரங்கள் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன.
இங்குள்ள விவசாயிகள் குறிப்பாகத் தேங்காய், இளநீர் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலமும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
முக்கியப் பிரச்னை (The main problem)
பெரும்பாலும் தென்னை விசாயிகள் சந்திக்கும் பிரச்னையே தேங்காய் அழுகிவிடுவதுதான். விற்பனை செய்யப்படும் தேங்காய்களில் குறைந்த பட்சம் 10 சதவீதத் தேங்காய்களாவது, வாடிக்கையாளர்களின் கைகளை அடையும்போது, அழுகிவிடுகின்றன.
சில நாட்களுக்குப் பிறகு (After a few days)
வாடிக்கையாளர்களை அடையும்போது, குறிப்பிட்ட நாட்களைக் கடக்கும்பட்சத்தில், ஒரு சில தேங்காய்கள் அழுகிவிடும். இதனைத் தடுப்பதற்காகவும், தேங்காய் எண்ணெய் எடுத்து விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதாலும் கொப்பரைத் தேங்காயாக, இதனை மாற்றுவது சிறந்தது.
கொப்பரைத் தேங்காய் (Copra coconut)
எனவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, தேங்காயை உடனடியாகக் கொப்பரையாக மாற்றுவது பெரிதும் கைகொடுக்கும். அதேநேரத்தில் தேங்காயை விட கொப்பரைத் தேங்காய்க்கு அதிக விலையும் கிடைக்கும்.
கூடுதல் வருவாய் (Extra income)
அதேநேரத்தில் கொப்பரை, தேங்காய் எண்ணை உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும்.
அதிக செலவு (High cost)
ஆனால் அதற்கான உலர்களங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அதிக செலவு பிடிப்பதால் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நவீன எந்திரம் (Modern machine)
இந்நிலையில் கொப்பரை உற்பத்தியை எளிமைப்படுத்தும் விதமாக சூடான காற்று மூலம் அதிகபட்சம் 2 நாட்களுக்குள் கொப்பரை உற்பத்தி செய்யும் வகையிலான நவீன எந்திரம் உடுமலை ஒழுங்கு முறை சிற்பனைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாகப் பயன்பாட்டுக்கு வராமல் இருந்த இந்த எந்திரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த எந்திரம் விவசாயிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
உபயோகிப்பது எப்படி? (How to use?)
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைந்த தேங்காய்களில் மட்டையை உரித்து முழுதாகக் கொண்டு வந்தால் போதும்.
அதனை நவீன எந்திரம் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் 2 துண்டுகளாக உடைத்துக்கொள்ளலாம்.
5,000 தேங்காய்கள் (5,000 coconuts)
-
பின்னர் அதனை ஹாட் சேம்பர் எனப்படும் உலர்த்தும் அறையில் போடவேண்டும்.
-
ஒரு அறையில் ஒரு நேரத்தில் 5,000 தேங்காய்களை உலர வைக்க முடியும்.
-
காய்களை சூடாக்குவதற்கு எரிபொருளாக விறகுகளைப் பயன்படுத்த வேண்டும்.
கொப்பரை
கொப்பரை என்பது தேங்காயை நங்கு உலரவைத்த பின் கிடைக்கும் ஒரு பொருள் ஆகும். தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர்.
தேங்காய் எண்ணெய் (coconut oil)
தேங்காய் எண்ணெய் எடுப்பதற்குக் கொப்பரை பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நன்கு உலர்த்தி அதைக் கொப்பரை ஆக்குவர். இது பல தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு ஒரு முக்கியமான விவசாய பொருளாக அமைகிறது. இதில் எண்ணெய்யை பிரித்தெடுத்த பிறகு தேங்காய்க் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க...
மகிமைகள் நிறைந்த வெண்ணெய் பழம் என்னும் அவகோடா பற்றி ஓர் பார்வை