மூலிகைப்பயிர் சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டலாம். அருகம்புல், அமுக்கரா கிழங்கு, அத்தி, ஆடாதோடை, கற்பூரவல்லி, புதினா, வெட்டிவேர், வல்லாரை, திருநீற்றுப் பச்சிலை, துாதுவளை, கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, தண்ணீர்விட்டான் கிழங்கு, செம்பருத்தி, நித்யகல்யாணி, சோற்றுக்கற்றாழை, வசம்பு, திப்பிலி போன்ற பயிர்களை பல இடங்களில் வளர்க்கலாம். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
மூலிகை உற்பத்தி (Herb Production)
முருங்கை, நெல்லி, மாதுளை, இஞ்சி, சப்போட்டா, கொய்யா, மா போன்றவை பலவித மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் இலை, காய், பூ, பழம், பட்டை, வேர், முழு செடி, விதை என மூலிகையின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. வெகு சிலரே மூலிகை உற்பத்தியில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றனர்.
மூலிகை சாகுபடி குறித்த அறியாமையே இதற்கான விழிப்புணர்வு இன்மைக்கு காரணம். இயற்கை விவசாயிகளுக்கு மூலிகைப் பயிர் வளர்ப்பு சிறந்த வரம். சிறு பாத்திகள் அல்லது மேட்டுப் பாத்திகள் அமைத்து தேவைக்கேற்ப நிழல் வலை நாற்றங்கால் மூலம் வேர் விட்ட செடிகள், ஒட்டு அல்லது பதியன் முறையில் வளர்க்கலாம்.
மூலிகை வியாபாரிகள் வாங்குவதற்கு ஏற்ப மூலிகைகளை ஆராய்ந்து தேர்வு செய்து நட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் கூட புதிதாக நாற்றுப்பண்ணைகள் துவங்கி மூலிகை நாற்றுகள் விற்கலாம். வீட்டின் தேவைகளைகூட சிறு மூலிகைத் தோட்டம் அமைத்து பூர்த்தி செய்யலாம்.
இளங்கோவன்,
இணை இயக்குனர்,
வேளாண்மை துறை,
காஞ்சிபுரம்
98420 07125
மேலும் படிக்க
ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடியை அதிகரிக்க சில யுக்திகள்!
தொழில் தொடங்க விருப்பமா? மானியத்துடன் உதவும் அரசின் திட்டங்கள்!