Farm Info

Saturday, 09 October 2021 08:09 AM , by: Elavarse Sivakumar

நெற்பயிரை இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களிடம் இருந்துப் பாதுகாப்பதற்கு பல்வேறு நுட்பங்கள் கையாளுப்படுகின்றன.

3500 ஹெக்டேர் பரப்பில் (Covering an area of ​​3500 hectares)

புதுக்கோட்டை மாவட்டம், சுந்தர்வகோட்டை வட்டாரத்தில் சுமார் 3500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பாபருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக சம்பா பருவத்தில் விவசாயிகள் நீண்டகால நெல் ரகமான சி.ஆர் - 1000 சப்-1 மற்றும் பின் சம்பா விற்கு ஏற்ற ரகங்களான ஆடுதுறை - 39, 8.ஆர்-20, திருக் குப்பம்-13 போன்ற ரகங்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

பின்விளைவுகள் (Consequences)

நடப்பு சம்பா பருவத்திற்கு விவசாயிகள் தற்சமயம் நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாற்றாங்காலில் தோன்றக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு ரசாயன பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்துவதால் பூச்சிகளுக்கு பூச்சிக்கொல்லிகளின் எதிர்ப்புத் தன்மை உருவாவதால் திடீர் இனப்பெருக்கம், மறுஉற்பத்தி, நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்துபோதல், சுற்றுசூழல் சீர்கேடு, தானியங்களில் பூச்சிக்கொல்லிகளின் வீழ்படிவு தங்குதல் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே விவசாயிகள் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த மாற்று வழிகளை கடைபிடித்தல் அல்லது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது சிறந்ததாகும்.

பூச்சித் தாக்குதல் (Insect attack)

  • நாற்றாங்காலில் விதைத்த பத்து நாட்களுக்குள் நாற்றின் நுனிப்பகுதி கருகி இலையானது பேன்கள் சூழ்ந்துக் காணப்படும்.

  • இதனை உறுதிபடுத்திட உள்ளங்கையை நாற்றாங்கால் நீரில் நனைத்து நாற்றின் மீது தடவி உள்ளங்கையைத் திருப்பி பார்த்தால் கருப்பு நிறத்தில் சிறிய பேன்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

  • இதனை கட்டுப்படுத்திட ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை விசைத்தெளிப்பான் கொண்டு நாற்றாங்கால் இலையின் நுனிப்பகுதியில் நன்கு படும்படி பீய்ச்சி அடித்தால் இலைப்பேன்கள் கீழே கொட்டிவிடும்.

  • பின்னர் நாற்றாங்கால் நீரினை வடிகட்டி இலைப்பேன்களை அப்புறப்படுத்தலாம்.

  • விசைத் தெளிப்பான் இல்லாத விவசாயிகள் நாற்றாங்கால் நீரில் பத்து நிமிடங்கள் நாற்றுக்களை முழுவதும் நனையுமாறு மூழ்கடித்து பின்பு நீரினை வடிகட்டுவதால் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்

  • ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு 10 மி.லிட்டர் என்ற அளவில் 3 சதவீத வேப்ப எண்ணையுடன் 10 கிராம் ஒட்டும் திரவத்தை சேர்த்து நாற்றாங்கால் இலைப்பரப்பில் தெளிக்கலாம்.

  • மேலும் நாற்றாங்காலின் மேற்படிப்பில் ஈர துணிபினைக் கொண்டு இழுக்கும் போது இலைப் பேன்கள் நீரில் மூழ்கி இறந்துவிடும்.

  • விதைத்த 10 முதல் 15 நாட்களுக்குள் தோன்றக்கூடிய பட்டைக் கொம்பு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த, நாற்றாங்காவில் 10 எண்கள் வடிவ குச்சிகளை நட்டுவைப்பது உதவும்.

  • மேலும், பறவைகள் குருவிகள், மைனா, கோட்டான் போன்றவை குச்யில் அமர்ந்து குட்டைக்கொம்பு வெட்டுக்கிளிகள், இலை உண்ணும் புழுக்கள், அந்துப்பூச்சிகள் ஆகியவற்றை பிடித்து உண்டு அழிக்கும்.

இயற்கை வழி மேலாண்மை (Natural way management)

நாற்றாங்காலில் தோன்றக்கூடிய நோய்த் தாக்குதலை குறைக்க 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் பொ பேசியானா என்ற உயிர் பூச்சிக்கொல்லியினை அதிகாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். இதனால், பழக்களின் மீது நோய் உருவாகி புழுக்கள் அழிந்து போகும்.

மேலும் நெல் நாற்றாங்காலை சுற்றியுள்ள வரப்புகளை புல் பூண்டு, களைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிப்பதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள் நாற்றாங்காலை நாக்காதளறு பாதுகாக்கலாம்.

தகவல்

எஸ்.அன்பரசன்

வேளாண்மை உதவி இயக்குநர்

கந்தர்வகோட்டை

மேலும் படிக்க...

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)