தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் பெருகி வருவதால் விவசாயிகள் மகசூல் இழப்புக்கு (Yield Loss) ஆளாகின்றனர்.
நெல், சிறுதானியம், பயறு வகை, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வாழை, கத்திரி என அனைத்து பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன. முள்வேலி, மின்சாரவேலி, பல்வேறு நிறங்களில் துணிகளை கட்டி இவற்றை கட்டுப்படுத்துகின்றனர்.
காட்டுப்பன்றி விரட்டி
வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் வேலுார் விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் உயிரியல் முறையில் காட்டுப்பன்றி விரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வீரியம் 3 மாதங்கள் வரை இருக்கும்.ஒரு ஏக்கருக்கு தாவர காட்டுப்பன்றி விரட்டி 500 மில்லி தேவைப்படும். பயிர் செய்திருக்கும் நிலத்தைச் சுற்றி வரப்பு பகுதிகளில் இரண்டடி உயர குச்சிகளை பத்தடி இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒன்றரை அடி உயரத்தில் கட்டுகம்பியால் அவற்றை இணைக்க வேண்டும்.
இந்த குச்சிகளின் இருபுறமும் குறைந்தது இரண்டு அடிகளுக்கு களைச்செடிகள் இருக்கக்கூடாது. சிறிய டப்பாவின் மேற்பகுதியில் நான்கு துளைகள் இட்டு 5 மில்லி திரவம் ஊற்றி மூடவேண்டும். இதை கம்பியில் ஆங்காங்கே கட்ட வேண்டும். ஏக்கருக்கு 100 சிறிய டப்பா தேவைப்படும். துளைகளின் வழியாக திரவத்தின் வாசனை வெளியேறும். இந்த வாசனையால் மூன்று மாதம் வரை காட்டுப்பன்றிகள் வயல்களை சேதப்படுத்தாமல் தடுக்கலாம். தேவைப்படும் விவசாயிகள் கட்டணம் செலுத்தி பெறலாம்.
மேலும் தகவலுக்கு
திலகம்,
உதவி பேராசிரியர்
நந்தகுமார்,
பேராசிரியர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
விரிஞ்சிபுரம்,
வேலுார், 95851 19749.
மேலும் படிக்க