அரபிக்கடலில் உருவாகியுள்ளப் புதியக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)
விதர்பா முதல் தென் தமிழகம் வரை 0.9 கிலோமீட்டர் உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
13.05.21
மிதமான மழை (Moderate rain)
இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy Rain)
நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை (Dry Weather)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
14.05.2021
கனமழை (Heavy Rain)
தேனீ, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை (Moderate rain)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பரூரில் 57 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு லட்சத்தீவுப் பகுதிகளில் புதியக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
13.05.21
-
இதன் காரணமாக, குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
14.05.21
-
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதனால், குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு, தென் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது.
-
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
15.05.21
புயலாக மாற வாய்ப்பு (Chance of becoming a storm)
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக்கூடும். இதனால்,
குமரிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு மேற்கு அரபிக் கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீன்பிடிக்கத் தடை (Prohibition of fishing)
எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாநிலங்களுக்கு கனமழை
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதனால் 4 நாள்களுக்கு கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வரி சேமிப்பு திட்டமிடலை துவக்க சரியான நேரம் எது?
டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கலாம்! வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை!
அரபிக்கடலில் காற்றழுத்தம்! குமரி, நெல்லையில் இடியுடன் கனமழை!