முந்திரி பழத்திலிருந்து உற்சாக பானம் தயாரிக்க முடியாவிட்டாலும் ஊட்டச்சத்து பானம் தயாரிப்பது குறித்து ஆய்வுகள் செய்து முடிவு எடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முந்திரி பழத்தில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுமா என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய தங்கம் தென்னரசு, உற்சாக பானம் இல்லை என்றாலும் ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்கப்பட வேண்டும் என்பதை உறுப்பினர் கேட்டதை குறிப்பிட்டார்.
வாழை நார் (Banana Fiber)
இதனை வணிக ரீதியாகவும் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், வாழையிலிருந்து நார், வாழைத் தண்டிலிருந்து பிஸ்கட், வாழைக் கிழங்கை சித்த மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம். எனவே மேட்டுப்பாளையம் தொகுதியில் வாழை தொழிற்சாலை தொடங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வாழை தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு உலகளாவிய சந்தை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க முன்வந்தாலும், ஐஐடி ஆகிய நிறுவனங்களை வைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்வாந்தாலும் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னையில் ரிமோட் கண்ட்ரோல்!
சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்கள் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம்!