Farm Info

Thursday, 24 December 2020 07:56 PM , by: KJ Staff

Credit : Vatican News

கிராம பஞ்சாயத்துகளை தேடிச் சென்று, விவசாயிகளை சந்தித்து, சாகுபடிக்கு (Cultivation) உதவும் திட்டத்தை வேளாண் துறை துவக்கியுள்ளது.

விவசாயிகளை சந்தித்தல்:

தமிழக அரசு, உழவர் அலுவலர் திட்டத்தை (Farmer Officer Program) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள், குறிப்பிட்ட நாளில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு, கட்டாயமாக, நேரில் செல்ல வேண்டும். விவசாயிகளை சந்தித்து, அரசின் சாகுபடி திட்டங்கள் (Cultivation project) குறித்து விளக்க வேண்டும். விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை (Techniques) எடுத்துரைக்க வேண்டும். தங்கள் கிராமத்திற்கு அலுவலர்கள் எந்த நாளில், எந்த இடத்திற்கு வருகின்றனர் என்ற விபரத்தை, 'உழவன் செயலியில் (Uzhavan App) உள்ள உழவர் அலுவலர், தொடர்பு திட்ட சேவை வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி (Kagandeep Singh Bedi) அறிவித்துள்ளார்.

வேளாண் அலுவலர் விவரங்கள்:

விவசாயிகளை சந்தித்து சாகுபடி தொழில்நுட்பங்களை விவரிக்கும் சேவையில், தங்கள் மாவட்டம், வட்டாரம் மற்றும் ஊராட்சியை தேர்வு செய்தவுடன், தங்கள் பகுதிக்கான அலுவலர் பெயர், மொபைல் போன் எண், அவரது வருகை விபரம் ஆகியவை இடம்பெற்று இருக்கும். இது மட்டுமின்றி, அந்த பகுதிகளின் முன்னோடி விவசாயிகளின் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி, பயன்பெற வேண்டும். விவசாயிகளுக்காக வேளாண் துறையின் இந்தத் திட்டம் நிச்சயம் நல்ஷ பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தத் திட்டத்தின் தகவல் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய வேண்டும்.

விவசாயிகளுக்காக வேளாண் துறை உருவாக்கியுள்ள இந்தத் திட்டம், விவசாயிகளின் சாகுபடியை அதிகரிக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி அடையும். விவசாயிகளைத் தேடி வந்து உதவும் வேளாண் அலுவலர்களுக்கும் இது புது அனுபவமாக இருக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பிரம்மாண்ட மாடித் தோட்டத்தை அமைத்த மணலி மண்டலம்!

உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் வாழ்வதில் மகிழ்ச்சி! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

இயற்கை விவசாயத்தை கையிலெடுத்த தருமபுரி விவசாயிகள்! குறைந்த செலவில் அதிக மகசூல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)