மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனி ரேஷன் அட்டை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கு சிலக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இதற்காக புதிய ரேஷன் கார்டு தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தகுதியில்லாத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்குமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. மேலும், தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் அட்டைகளை ஒப்படைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதனைஏற்று, 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்துள்ளனர்.
தயாரிப்பு பணி
இதையடுத்து,மாநிலத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளதால் மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்படுகிறது. விரைவில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
கூடுதல் சலுகைகள்
இதைத்தவிர, மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கெனத் தனி ரேஷன் அட்டை வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கு சிலக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.
அமைச்சர் தகவல்
இதற்காக புதிய ரேஷன் கார்டு தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து வரும் நாட்களில் புதிய அளவில் ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
33 மாத சம்பளம் ரூ.24 லட்சத்தை திருப்பிக்கெடுத்த மனசாட்சியுள்ள ஆசிரியர்!