விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நிதிச்சுமையை எதிர்கொள்ள ஏதுவாக பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பயிர்க்கடன் (Crop Loan)
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மத்திய கூட்டுறவு வங்கியின் 27 கிளைகள், 238 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன்கள் மற்றும் விவசாயம் அல்லாத பிற கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரூ.543.80 கோடி (Rs.543.80 Crore)
நடப்பு நிதியாண்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடனாக 76,263 பயனாளிகளுக்கு ரூ.543.80 கோடியும், சங்கங்கள் மற்றும் மத்திய வங்கி கிளைகள் மூலம் நகைக்கடன்கள் 1,42,146 நபர்களுக்கு ரூ.809.04 கோடியும் மற்றும் இதர கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.
உத்தரவு இல்லை (No Order)
விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கிட தேவையான அனைத்து வழிவகைகளையும் மத்திய வங்கி மூலம் மேற்கொண்டு வருகிறது.
பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தைப் பட்ட காய்கறிகளுக்கு என்ன விலை கிடைக்கும்-TNAUவின் முன்னறிவிப்பு!