பயிர் கழிவுகளை அகற்றுவதற்காக விளை நிலைங்களைத் தீயிட்டு எரிக்கும் விவசாயிகளுக்கு PM-Kisan நிதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் 13-வது தவணைத் தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாகுபடி முடிந்ததும், விளைநிலங்களில் உள்ள பயிர் கழிவுகளை அகற்றுவதற்காக, அதாவது மறு சாகுபடிக்கு முன்பாக வைக்கோல் இட்டு நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்தும் நடைமுறை, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில், பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதிகரிப்பு
தற்போது இந்த மாநிலங்களில், காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருவதால், நிலத்தை எரிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என வேளாண்துறை சார்பில் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக, விளைநிலங்களை தீயிட்டு எரித்தது தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதிகரித்தக் காற்று மாசுபாடு, பள்ளிகளை மூட வைத்தது.
ரூ.6,000
இதையடுத்து காற்று மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பயிர்கழிவு எரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 6,000 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்ப மாட்டாது என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
தடுக்கப்படும்
குறிப்பாக இந்த பயிர் கழிவு எரிப்பில் ஈடுபடும் விவசாயிகள், ஏற்கனவே கிசான் சம்மன் யோஜனா திட்டத்தில் முன்பதிவு செய்திருந்தால், அவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, டெல்லி, ஹரியானா, பஞ்சாய் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அபராதம்
அது மட்டுமல்ல, பயிர் கழிவு எரிப்பில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிலத்தின் விவசாயிக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என்றும், ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட நிலமாக இருப்பில், அபராதம் 5,000 விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...