சிறு தானியங்கள் உலுக்கு வலு சேர்க்க கூடியது. சிறுதானியங்களை சத்துமாவாக தயாரித்து, அதனை பொது மக்களிடையே விற்பனை செய்து வருகிறார்கள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர். இந்த சத்துமாவுத் தொழிலில் நல்ல இலாபம் கிடைப்பதாகவும், விவசாயிகளுக்கும் இதில் பயனுள்ளது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
சத்துமாவு (Nutrition Powder)
சத்துமாவு தயாரித்து, விற்பனை செய்வது குறித்து, காஞ்சிபுரம் மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: வரகு, குதிரை வாலி, தினை, சாமை ஆகிய சிறு தானியங்களில், மதிப்பு கூட்டிய பொருட்களாக தயாரிக்கலாம். உதாரணமாக, தினை சிறு தானியத்தை பயன்படுத்தி, ஊட்டச்சத்து மாவு தயாரித்து விற்பனை செய்கிறோம். உதாரணமாக, சிறு தானியங்களில் சரிவிகித அளவு எடுத்துக் கொண்டு, அதை மாவாக அரைத்து, பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்று பாலில் போட்டு குடிக்கும் அளவிற்கு சத்துமாவு தயார்படுத்தி உள்ளோம்.
இது தவிர, பாரம்பரிய ரக அரிசி வகைகளின் மாவு தயாரித்து விற்பனை செய்கிறோம். சிறு தானிய விளை பொருட்களில், மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் போது, கணிசமான வருவாய் ஈட்ட முடியும். உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
தொடர்புக்கு
மகளிர் குழு - 80728 82959
மேலும் படிக்க
குவைத்துக்கு மாட்டுச் சாணம் ஏற்றுமதி: இயற்கை விவசாயத்திற்கு வழிவகை!
சீமைக்கருவேல மரத்தை அகற்ற இயந்திரம் கண்டுபிடிப்பு: மதுரை மாணவி அசத்தல்!