Farm Info

Monday, 29 August 2022 07:47 PM , by: R. Balakrishnan

TNAU one day Training

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக, "ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்" பற்றிய ஒருநாள் பயிற்சி 02-09-2022, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இப்பயிற்சியின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • ஒட்டுண்ணி வகைகள்
  • ஊண் விழுங்கிக் / இரை விழுங்கிகள்
  • நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை
  • டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு
  • புழு ஒட்டுண்ணி வளர்ப்பு
  • கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல்
  • பொறிவண்டு வளர்ப்பு
  • பப்பாளி மாவுப்பூச்சி அசரோபகஸ் ஒட்டுண்ணி வளர்ப்பு
  • பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு

பயிற்சி நாள் (ம) நேரம் (Training Date & Time)

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 02.09.2022 வெள்ளிக்கிழமை அன்று, காலை 9.00 மணிக்குள்ளாக பூச்சியியல் துறைக்கு தங்கள் செலவில் வந்து சேர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ரு.9,00- (ரூபாய் தொள்ளாயிரம் மட்டும்) நேரடியாக பயிற்சி நாள் அன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் பூச்சியியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர்-641 003.
தொலைபேசி எண் - 0422-6611214, 0422-6611414 மின்னஞ்சல் - entomology@tnau.ac.in

மேலும் படிக்க

வீடு தேடி வரும் விதை நெல்: விவசாயத்தை மீட்டெடுக்கும் பட்டதாரி!

ஏலத்தில் நல்ல விலைக்கு போன எள்: ஈரோடு விவசாயிகள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)