ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காக சாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் பற்றி, வேளாண் அறிவியல் நிலையத்தின் இணையவழிப் பயிற்சி நடைபெற உள்ளது.இதில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சூரிய சக்தி (Solar energy)
சூரிய ஆற்றல் என்பது சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றுவதாகும். ஒளிமின் அழுத்தியங்களைப் பயன்படுத்திச் சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக மாற்றலாம் அல்லது முழுச்செறிவூட்டும் சூரிய சக்தி (CSP) மூலம் மறைமுகமாக மாற்றலாம்.
பொதுவாக, சூரியனின் ஆற்றலை நீரில் குவிப்பதன் மூலம் நீர் கொதிக்கவைக்கப்படுகிறது. இம்முறையின் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
இணையவழிப் பயிற்சி (Online training)
இதனைக் கருத்தில்கொண்டு, சாண எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்த இணையவழிப் பயிற்சி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று காலை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில், அனைத்து விவசாயிகளும் இணையதளம் மூலம் கலந்துகொள்ளலாம்.
நடைபெறும் நாள் (The day of the event)
இன்று (ஜூன் 15)
பயிற்சி நேரம் (Training time)
காலை 11 மணி முதல் பகல்12.30 மணி வரை
தலைப்புகள் (Topics discussed)
இந்தக் கருத்தரங்கத்தில் சாண எரிவாயுப் பயன்பாடுகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொறியியல் துறையின் இணை பேராசிரியர் முனைவர். டி. ரமேஷ் விளக்குகிறார்.
இதேபோல், சூரிய ஆற்றல் பயன்பாடுகள் குறித்து இணைப் பேராசிரியர் முனைவர். ஆர். மகேந்திரன் எடுத்துரைக்கிறார்.
விஞ்ஞானிகள் பங்கேற்பு (Participation of scientists)
இதில் MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் டாக்டர். பி.அழகேசன் துவக்க உரை ஆற்றுகிறார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொறியியல்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். பி. சுப்ரமணியன் சிறப்புரை ஆற்றுகிறார். விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் இணைந்து பயிற்சி பெற்றுக்கொண்டுப் பயனடையலாம்.
Join with Zoom Meeting
கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
https://us02web.zoom.us/j/6689229190?pwd=eVBiU1RaZHZ6eThvb3lqd0FaT1JGZz09#success
Meeting ID : 668 922 9190 Passcode : 2HMfYF
மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் முறை விஞ்ஞானி திரு. டி. ஜான் பிரபாகரன் அவர்களை 9965992413 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இணைந்து ஏற்பாடு (Arranged together)
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் , MYRADA வேளாண் அறிவியல் நிலையமும், இணைந்து இந்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!