தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் அறிவியலை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச்செல்வதில் இன்றியமையாதப் பங்கு வகிக்கிறது. இதைத் தவிர, புதிய பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவ்வப்போது, இளைஞர் மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சியையும் அளித்து வருகிறது.
2 நாள் பயிற்சி
இதன் ஒருபகுதியாக, காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 08.06.2022 மற்றும் 09.06.2022 ஆகிய நாட்களில் நடைபெறும்.
சிறப்பு அம்சம்
இதில் கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
-
முருங்கை பொடி,
-
பருப்பு பொடி சாம்பார் பொடி,
-
பிஸ்கட் அடை மிக்கம்,
-
ஊறுகாய்,
-
நுாடுல்ஸ்
-
காளான் பொடி,
-
சூப் மிக்ஸ்,
-
பிஸ்கட்,
-
ஊறுகாய்,
-
பிழிதல் தொழில் நுட்பம்
ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,770/- (ரூ.1,500/- + GST 18 %) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம்
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை - 641 003
பேருந்து நிறுத்தம்
வாயில் எண் 7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
மருதமலை சாலை
கோவை - 641 003
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003.
தொலை பேசி எண்- 0422-6611268
மேலும் படிக்க...
பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!