Farm Info

Friday, 29 October 2021 11:16 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக கனமழை (Very heavy rain)

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.

கனமழை (Heavy rain)

புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.1ம் தேதி வரை (Until Nov. 1)

இந்நிலையில் இன்று முதல் நவம்பர் 1 வரை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்ச் அலார்ட் (Orange Alert)

இதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

இதேபோன்று, காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசும். காற்றின் வேகமானது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற்கரையோரம், மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதியில் நிலவும்.
எனவே மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

விளைநிலங்களை உருவாக்க ரெடியா?- ஹெக்டேருக்கு ரூ. 22,800 வரை மானியம்!

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)