தமிழகத்தில் நாளை மறுநாள் ஆறு மாவட்டங்களுக்கும், 22ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மிக கனமழை (Very heavy rain)
இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது மிக கன மழை என்பது, 'ஆரஞ்ச் அலர்ட்' (Orange Alert) எச்சரிக்கை. அதேபோல் மேலும் பல மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
20.10.21
கனமழை (Heavy rain)
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூ, அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.
21.10.21
மிக கனமழை (Very heavy rain)
நாளை மறுநாள் அதாவது 21ம் தேதி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும்.
கனமழை (Heavy rain)
சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், கன மழை பெய்யும்.
22.10.21
மிக கனமழை (Very heavy rain)
வரும் 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
கனமழை (Heavy rain)
அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வாழைப்பழத்திற்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? TNAU கணிப்பு!
அறுவடை நெல் பாதிக்க விடக்கூடாது- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!