இயற்கை விவசாயம் முறையில் விளைவித்த காய்கறிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று நன்கொடையாளா்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி வேண்டுகோள் விடுத்தாா்.
இயற்கை விவசாயம் (Organic Farming)
திருமலை அன்னமய்யபவனில் காய்கறிகள் நன்கொடையாளா்களின் வருடாந்திர குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அண்டை மாநிலங்களைச் சோந்த அனைத்து காய்கறி நன்கொடையாளா்களும் கலந்து கொண்டனா்.
கூட்ட நிறைவுக்குப் பின்னா் செயல் அதிகாரி தா்மாரெட்டி கூறியதாவது: 2004-ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமாா் ரூ. 200 கோடிக்கு காய்கறிகள் தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. காய்கறிகளின் நன்கொடை 18-ஆம் ஆண்டை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
இதற்கு பல்வேறு முக்கிய சந்தா்ப்பங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னப் பிரசாதத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி நன்கொடையாளா்களின் அபரிமிதமான பங்களிப்புகளுக்கு நன்றி. தினமும் திருமலைக்கு வருகை தரும் ஏராளமான பக்தா்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குவதற்காக இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை வழங்க நன்கொடையாளா்கள் ஊக்குவிக்க வேண்டும்.
கடந்த மே மாதம் முதல் 'இயற்கை விவசாயம்' மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களைக் கொண்டு தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு அன்ன பிரசாதம் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இயற்கை காய்கறிகளையும் படிப்படியாக ஊக்குவிக்க விரும்புகிறோம் என்றாா்.
மேலும் படிக்க