சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசாணை (Government Order)
நாமக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்-II (சம்பா) மற்றும் வெங்காயம்-II பயிர்களுக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நெல்-11 (சம்பா) 21 பிர்க்காக்களிலும் மற்றும் வெங்காயம் 11 6 பிர்க்காக்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
விருப்பத்தின் பேரில் (At will)
கடன் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள் பொதுச்சேவை மையங் கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்றவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
காலக்கெடு (Deadline)
இத்திட்டத்தில் நெல்-11 (சம்பா பயிருக்கு 15.12.2021, வெங் காயம்-11 பயிருக்கு 30.11.2021ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பிரிமீயம்தொகை (Premium)
ஒரு ஏக்கருக்கு நெல்-II (சம்பர்) பயிருக்கு ரூ.519 பிரிமீயம் மற்றும் வெங்காயம்-I பயிருக்கு ரூ.1920 பிரிமீயம் செலுத்த வேண்டும்.
தேவையான ஆவணங்கள் (Required Documents)
-
கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல்
-
விதைப்பு சான்று
-
செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
-
ஆதார் அட்டை நகல்
பயிர் காப்பீடு செய்ய விரும்புவோர், அதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் மேலேக் கூறியுள்ள ஆவணங்களை இணைத்துக் கட்டணத்தை பொதுச் சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செலுத்த வேண்டும்.
தொடர்புக்கு (Contact)
இது தொடர்பான விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலக அலுவலர்களை அணுகலாம்.
இதன்மூலம் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதல் ஆகிய இயற்கை இடர்களினால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் படிக்க...
நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!
சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!