Farm Info

Sunday, 31 July 2022 12:07 PM , by: Elavarse Sivakumar

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக, வயலில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நெல்மணிகளைக் கொண்டு நிறைபுத்தரிசி பூஜை மேற்கொள்ளப்பட உள்ளது. மழை வந்தால் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிறைப்புத்தரிசி பூஜை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும், அடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். இதற்காக தேவசம்போர்டுக்கு சொந்தமான வயலில் நெல் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

நடை திறப்பு

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை சபரிமலையில் வரும் ஆகஸ்ட் 4, அதிகாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக முந்திய நாள் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.இந்த பூஜைக்கான நெற்கதிர்கள் தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்டன. தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் நெற்கதிர்களை அறுத்து தொடங்கி வைத்தார்.

நெற்கதிர் ஊர்வலம்

பின் நெற்கதிர்கள் ஊர்வலமாக பம்பை கொண்டு வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.வரும் 3ம் தேதி பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு 4ம் தேதி பூஜை நடக்கும்.

முன்கூட்டியே ஏற்பாடு

மழை வலுத்தால் நெற்கதிர்கள் கொண்டு வருவதில் தடை ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே அறுவடை நடத்தியதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

குறைந்தது எண்ணெய் விலை-இல்லத்தரசிகளுக்கு நிம்மதி!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)