திருச்சி அருகே கொள்முதல் நிலையங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளதாலும், கொள்முதல் தாமதமாக நடப்பதாலும், மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம் அடைந்துள்ளன.
நெல் சாகுபடி (Paddy cultivation)
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொள்முதல் நிலையங்கள் (Purchasing stations)
இந்த நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக, கடந்த மாதம் பி.மேட்டூர், வைரி செட்டிபாளையம், தங்கநகர், ஆலத்துடையான்பட்டி, எரகுடி வடக்கு ஆகிய ஐந்து இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1,000 மூட்டைகள் (1,000 bundles)
இங்கு, பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ள நிலையில், தினசரி ஒரு நிலையத்தில், 40 கிலோ எடையுள்ள 1,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
அரசியல் தலையீடு (Political interference)
கொள்முதலுக்கான, டோக்கன்' வழங்குவதும் சரிவர நடப்பதில்லை. பணம் தரக்கூடியவர்கள், ஆளுங்கட்சி சிபாரிசு உள்ளவர்களின் நெல்லை அளக்க முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
முளைத்த நெல்மணிகள் (Sprouted pearls)
இதனிடையே, சில நாட்களாகத் திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையில், கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்ட நெல்மணிகள் நனைந்து, முளைத்து வருகின்றன.
சில கொள்முதல் நிலையங்கள் அருகே, குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளன.
கூடுதலாக 1,000 மூட்டைகள் (கூடுதலாக 1,000 மூட்டைகள்)
இதையடுத்து, அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, ஒவ்வொரு மையங்களிலும் கூடுதலாக, 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். ஆனாலும் அது போதாது என விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து உப்பிலியபுரம் பகுதி விவசாயிகள் கூறுகையில்,
பாரபட்சம் கூடாது (Do not discriminate)
ஒவ்வொரு கொள்முதல் மையத்திலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் குவிந்துள்ளன.
இதுதவிர மூன்று மடங்கு நெல், அவரவர் வீடு மற்றும் வயல்களில் குவித்துள்ளன.'எனவே, உற்பத்திக்கு ஏற்ப கொள்முதல் அளவை அதிகரித்து, பாரபட்சமின்றி கொள்முதலை விரைந்து முடித்து, விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
குறிப்பாக, தண்ணீர் தேங்காத இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க...
121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!
மண் வளத்தை மேம்படுத்தும் புதிய மண் நுண்ணுயிரி நீலகிரியில் கண்டுபிடிப்பு!