பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியைத் வழங்கக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து உரமாக விளங்குவது பஞ்சகவ்யம். இதைக் கொண்டு பயிர்களையும், மண்ணின் தன்மையையும் மேம்படுத்தலாம் வளத்தை பாதுகாக்கலாம்.
உணவுப் பயிர்களில் பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கேடு விளைவிப்பதாக இருக்கின்றன.
இதில் இருந்து மீளும் வகையில் விவசாயிகளுக்கு இயற்கை வழியாகவும், பசுமாட்டின் வாயிலாகவும் கிடைக்கப் பெரும் பஞ்சகவ்யம் நன்மை பயக்கும் விதமாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பஞ்சகவ்யம் தயாரிக்கத் வேண்டுமானது:
- பசுவின் புது சாணம் 5 கிலோ
- பசுவின் கோமியம் 3 லிட்டர்
- பசு மாட்டுப் பால் 2 லிட்டர்
- பசுந்தயிர் 2 லிட்டர்
- பசு நெய் 1 லிட்டர்
- கரும்புச் சாறு 3 லிட்டர்
- இளநீர் 2 லிட்டர்
- வாழைப்பழம் 12
- கள் (கிடைக்கும் இடங்களில்) 2 லிட்டர்
கரும்புச் சாறு கிடைக்கவில்லை என்றால் 500 கிராம் நாட்டுச் சர்க்கரையுடன் 200 கிராம் ஈஸ்டு சேர்த்து 3 லிட்டர் நீரில் ஊற வைத்தால் 30 நிமிடங்களில் தரமான கரைசல் கிடைக்கும்.
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை(Method of preparation of Panchakavyam)
பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை நன்கு கலவை செய்து 3 நாள்களுக்கு அடிக்கடி கலக்கி வைக்கவும். நான்காம் நாள் இந்தக் கலவையுடன் இதர பொருள்களான தயிர், நெய், கரும்புச் சாறு, இளநீர், வாழைப்பழங்கள்,கள் ஆகிய அனைத்தையும் அதனுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை குறைந்த பட்சம் 4 நாள்கள் நன்றாக கலக்கி 15 நாள்கள் வைக்க வேண்டும், பிறகு 19-ஆம் நாள் முதல் பயிர்களில் தெளிக்க
பஞ்சகவ்யத்தில் உள்ள சத்துக்கள்(Nutrients in Panchakavyam)
பசு மாட்டு சாணம்: பாக்டீரியா, பூஞ்சானம், நுண் சத்துக்கள்.
பசு கோமியம்: பயிர் வளர்ச்சிக்குத் தேவையை பூர்த்தி செய்யும் தழைச்சத்து.
பால்: புரதம், கொழுப்பு, மாவு, அமினோ, அமிலம், கால்சியம் சத்துக்கள்.
தயிர்: ஜீரணிக்கத் தக்க செரிமானத் தன்மையைத் தரவல்ல நுண்ணியிரிகள்.
நெய்: வைட்டமின் ஏ.பி.கால்சியம், கொழுப்புச் சத்து.
கரும்புச் சாறு: சைக்கடோகைனின் எனும் வளர்ச்சி ஊக்கி, அனைத்து வகை தாது உப்புக்கள்.
இளநீர்: நுண்ணுயிர் வளர்ச்சிக்கான இனிப்பு.
வாழைப்பழம், பதநீர்: தாது உப்புக்கள் தரவல்லது. நொதிப்பு நிலை தந்து நுண்ணூட்டச் சத்தை தயாரிக்கின்றன.
முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யத்தில் பயிர் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும், வலுவாக விளங்கும் நுண்ணுயிர்களான அசோபைரில்லம், அசட்டோபேக்டர், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவையும், பேரூட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் உள்ளிட்ட பயிர்களுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.
பயிர்களுக்குப் பயன்படுத்தும் முறை(Method of application to crops)
முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் 300 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விசைத் தெளிப்பான், கைத் தெளிப்பான் மூலம் அணைத்து வகை பயிர்களுக்கும் படும் வகையில் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கலாம். ஒரு ஏக்கர் பயிருக்கு ஒரு முறை தெளிக்க 3 லிட்டர் பஞ்சகவ்யம் தேவை. இந்தக் கரைசலைத் தெளிப்பான்களில் ஊற்றிப் பயன்படுத்தும் போது கைத் தெளிப்பான் எனில், வடிகட்டியும், விசைத் தெளிப்பான் எனில் அதன் வால்வு, குழாயின் நுனிப் பகுதியை பெரிதாக்கிக் கொண்டும் பயன்படுத்துவது அவசியம்.
இந்த முறைகளில் பஞ்சகவ்யத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது பயிர்களை இயற்கை வழியில் பராமரிக்கலாம் மற்றும் பயன்பெறலாம்.
மேலும் படிக்க:
இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு சர்க்கரை ஏற்றுமதி!
மத்ஸ்ய விகாஸ் புரஸ்கார் யோஜனா: விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்