இந்தியாவில் எலிகள் (Rats) எண்ணிக்கை மக்கள் தொகையை விட ஆறு மடங்கு அதிகமாக பெருகியிருக்கிறது. இவை வீடுகளில் உணவுப் பொருள்களை நாசம் செய்வதுடன், வயல் வெளிகளில் பயிர்களையும், விதைகளையும், நாற்றுகளையும், பழங்களையும் எலிகள் அழிக்கின்றன.
ஆனால் பயிரில் பூச்சி, நோயினை கட்டுப்படுத்த பூச்சி மற்றும் பூஞ்சானங்கொல்லிகளை பயன்படுத்திய வயல்களில், எலியின் இயற்கை எதிரியான பாம்புகள் குறைந்திருப்பதால் வயல்களில் எலிகளினால் அதிகசேதம் (heavy loss) ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது.
கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டியவை (Control Methods)
-
கதிர் உருவாகும் தருணத்தில் இருந்து பால் பிடிக்கும் தருணம் வரை எலியின் சேதம் அதிகரிக்க இருக்க வாய்ப்புள்ளது.
-
இந்த பருவத்தில் வயலில் இறங்கி சேதத்தினை ஆய்வு செய்து கணக்கிட்டு, அதற்கு ஏற்றபடி எலி உள்ள வலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
-
பயிரின் கதிர் உருவாகும் தருணம் முதல் பால் பிடிக்கும் தருணம் வரையில், ஒரு வெட்டு வெட்டி பயிரில் சேதம் காணப்பட்டால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அதே பயிர் பல துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தால், கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-
இதே பருவத்தில் எலியின் இயற்கை எதிரிகளின் நடமாட்டம் அதிகம் தென்பட்டால் இயற்கையிலேயே எலி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
-
அறுவடையின் போது எலியின் இனப்பெருக்கம் காணப்பட்டால், எலிகள் உள்ள வலைகளை வெட்டி எலிகளை குட்டிகளுடன் அழிக்கலாம்.
-
பயிர் சாகுபடி அல்லாத பருவத்தில் அதாவது கோடை காலங்களில் பெரிய வரப்புகளை சிறியதாகவும், மேடு பள்ளங்களை சமப்படுத்தியும், புதர்கள் மற்றும் பொந்துகள் உள்ள திடல்களை சுத்தம் செய்யவேண்டும்.
-
பயிரில் மற்ற பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக இரசாயன பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்காமல் இருப்பது சிறந்தது. இதனால் பாம்புகள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.
-
ஒவ்வொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் கூடுமானவரை, ஒரே வயதுடைய இரகங்களை பயிர் செய்வதால், எலியினால் ஏற்படும் இழப்பு வெகுவாக குறைகிறது.
-
போதிய அளவு நீர் கிடைக்கும் காலங்களில் எலி வலைகள் உள்ள அளவிற்கு நீர் கட்டினால் எலிகள் இறந்து விடும்.
-
எலியினை விரும்பி அதிகளவில் உண்டு வாழும் பறவைகள் வசதியாக அமர்வதற்கு வயலில் எக்டேருக்கு சுமார் 10 இடங்களில் 9 அடி உயர பறவை இருக்கைகள் வைக்கலாம்.
-
மேலே கூறப்பட்ட இயற்கை எதிரிகளின் கட்டுப்பாட்டிற்கு பின்பும், எலியின் சேதம் பயிர் பருவத்தில் அதிகம் ஏற்பபட்டால், அந்த சேதம் கட்டுப்பாட்டிற்கு உகந்ததா எனக் கணக்கிட்டு, தேவைப்பட்டால் ஒரு எக்டேருக்கு 100-125 எலிக் கிட்டிகளை வைத்து எலியினை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
-
எலி பிடிக்கும் கூண்டுகளை ஏக்கருக்கு 4 முதல் 5 இடங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
இரசாயனமுறைக்கட்டுப்பாடு (Chemical Method)
எலிகள் அதிக நடமாட்டம் உள்ள வயல் பகுதிகளில் எலி வளைகளில் விஷப் புகையிட்ட 0.5 கிராம் அலுமினியம் பாஸ்பைட் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.
ஒரு பங்கு நிலக்கடலை அல்லது தேங்காய் பருப்பு கைபடாமல் 40 பங்கு ‘ஜிங்பாஸ்பைடு” – மருந்து கலந்து வயல் வெளிகளில் வைத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.
தகவல்
வே.ஜீவதயாளன்
கோபி வேளாண்மை உதவி இயக்குநர்,
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!