ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் (Integrated Farm Plan)
நஞ்சில்லா உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பலவித வருமானம் (Miscellaneous income)
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயிர் சாகுபடியை மட்டும் நம்பியிருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
செலவைக் குறைக்க (To reduce the cost)
இதன்மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானத்துக்கான வழிவகையை ஏற்படுத்த முடியும். மேலும் கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பண்ணைக் கழிவுகளை உரமாக்கி நிலவளத்தை மீட்டெடுக்க முடிவதுடன் உரத்துக்கான செலவையும் பெருமளவு குறைக்க முடியும்.
அத்துடன் தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவிப்பதால் கூடுதல் மகசூல் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கொடுக்க முடிவதால் தொழிலாளர்கள் ஆர்வமுடன் பணியாற்ற முன் வருவார்கள்.
மீன்களுக்கு உணவு (Food for fish)
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கோழி மற்றும் மீன் வளர்ப்பவர்கள் நெல் அறுவடையில் கிடைக்கும் பதர் நெல்லில் இருந்து தவிடு எடுத்து கோழித்தீவனமாகப் பயன்படுத்தலாம். அத்துடன் கோழிக்கழிவுகளை மீன்களுக்கு சிறந்த உணவாக மாற்றிக் கொள்ள முடியும்.
400 மீன்கள் (400 fish)
20 கோழிகளை வளர்த்தால் அவற்றின் கழிவுகள் மூலம் 400 மீன் குஞ்சுகளை வளர்க்க முடியும். இவ்வாறு கழிவுகள் பலவகையில் பயன்படுத்தப்படுவதால் பெருமளவு செலவு குறைவதுடன் வருமானம் இரட்டிப்பாகிறது.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கோழி மற்றும் மீன் வளர்ப்பவர்கள் நெல் அறுவடையில் கிடைக்கும் பதர் நெல்லில் இருந்து தவிடு எடுத்து கோழித்தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
மானியம் (Subsidy)
இதனைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்துக்கு அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. அதன்படி தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மானாவாரிபகுதி மேம்பாட்டுத்திட்டங்களில் தற்போது பயிர் சாகுபடியுடன் கால்நடைகள், நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், பயன்தரும் மரக்கன்றுகள், பழமரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு மற்றும் ஊட்டச் சத்து தோட்டம் ஆகிய இனங்களுக்கு 50 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது.
உழவன் செயலி (Plow processor)
இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
விவசாயம்: 50 ஆயிரம் முதலீடு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கவும்
ஒரு கிலோ ரூ. 5000- த்திற்கு!!!மருத்துவத் தாவரம்! சிவப்பு கற்றாழை!!!