பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விரைவில் இரு மடங்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்டுகிறது. ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2,000 என ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 9 தவணைகளில் நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் சென்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 9ஆவது தவணைக்கான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மற்றொரு தகவல் வந்துள்ளது. அதாவது, விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி விரைவில் இரு மடங்காக உயரவுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாய் தவணை வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கான ஆலோசனையில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரியவர்ந்துள்ளது.
இத்தகவல் உறுதிசெய்யப்பட்டு, அதன்படி அறிவிப்பு வெளியானால் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் கிடைப்பதற்குப் பதிலாக மூன்று தவணைகளில் ரூ.12,000 கிடைக்கும் என்று எதிர்பாக்கப்டுகிறது. இது தொடர்பாக பிகார் மாநில வேளாண் துறை அமைச்சர் அமரேந்திர பிரதாப் சிங், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்துப் பேசியதாகவும், இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றிய இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க:
PM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம்! 10 வது தவணையின் 2000 ரூபாய்!