பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், கட்டாய eKYC ஐ இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன், அதாவது ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை முடிக்காவிட்டால், விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் நிதியுதவிக் கிடைக்க வாய்ப்பு இல்லை.
பிரதமரின் கிசான் திட்டம்
பொருளாதரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், அவர்களது நிதிச்சுமையைக் குறைக்கும் விதமாகவும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த தவணைத் தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
12-வது தவணை
இதுவரை 11 தவணைத் தொகைகள் லட்சக்கணக்கான விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 12-வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தகுதியுள்ள விவசாயிகள், இந்தத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பலன்களைப் பெற, கட்டாய E-KYC ஐ முடிக்க இன்றுடன் அவகாசம் முடிகிறது.
காலக்கெடு
ஆகவே இன்னும் eKYC முறைப்படி முடிக்காத விவசாயிகள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவ்வாறு செய்ய வேண்டும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கட்டாய eKYC ஐ முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது.
அதன்படி, PM KISAN அதிகாரப்பூர்வ இணையதளம் பின்வரும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறது. அவை,
-
PM KISAN பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயம்.
-
OTP அடிப்படையிலான eKYC PM KISAN போர்ட்டலில் கிடைக்கிறது.
-
பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYCக்காக அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.
-
PM KISAN பயனாளிகளுக்கான eKYC இன் காலக்கெடு 31 ஆகஸ்ட் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP அடிப்படையிலான EKYC கீழே உள்ள https://exlink.pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற இணைப்பில் கிளிக் செய்யலாம்.
அப்டேட் செய்வது எப்படி?
மேலே குறிப்பிட்ட PM Kisan இணையதளத்தைப் பார்வையிடவும். அங்கு, eKYC பக்கத்தை கிளிக் செய்யவும். தொடர்ந்து ஆதார் எண்-ஐ உள்ளீடு செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் 4 இலக்க OTP ஐ பெறுவீர்கள்.
பின்னர் சமர்ப்பி OTP என்பதைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து, ஆதார் ஓடிபி எண்ணை உள்ளீடவும். உங்கள் ஆதார் எண் பதிவேற்றம் நிறைவடையும்.
மேலும் படிக்க...