இந்தியாவில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 14வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிஎம் கிசான் (PM Kisan)
இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவக் கூடிய வகையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு நிதியாண்டில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என, ரூ.6000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது.
இதுவரை பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13 தவணைத் தொகை பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 14 வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பபட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 14 வது பிஎம் கிசான் தவணைத் தொகை வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கட்டாயம்
பிஎம் கிசான் தவணைத் தொகையைப் பெற விவசாயிகள் கட்டாயமாக வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் இணைப்புப் பணியை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம்: சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு!
தமிழ்நாடு அரசின் “செழிப்பு” இயற்கை உரம்: விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!