இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 October, 2022 10:51 AM IST

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இந்த விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுத்த கட்ட தொகை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கொடுக்கப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்து, உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

ரூ.6,000

உண்மையில், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே மத்திய மோடி அரசு இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

ஏற்கனவே 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டன.இந்த 12-வது தவணையை நாட்டிலுள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை எதிர்நோக்கியுள்ளனர். இருப்பினும், இ-கேஒய்சி அப்டேட்டை இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 12ஆவது தவணையின் பலன் கிடைக்காது.

e-KYC  அவசியம்

பிஎம் கிசான் திட்டத்தின் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்வது அவசியம். அதாவது, பதிவு செய்த விவசாயிகள் இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் OTP அடிப்படையிலான e-KYC அப்டேட்டை முடிக்க வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தைப் பார்வையிடலாம்.

e-KYC எப்படி முடிப்பது?

  • PM Kisan Yojana பயனாளிகள் e-KYC ஐ முடிக்க முதலில் pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.

  • அங்கே ஃபார்மர்ஸ் கார்னர் ஆப்சனில் சென்று E-KYC டேப்பில் கிளிக் செய்யவும்.

  • புதிய வலைப்பக்கத்தில், ஆதார் எண்ணை உள்ளிட்டு, சர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.

  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

  • அந்த OTP நம்பரை பதிவிட்டால் போதும். இ-கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டுவிடும். பணம் வருவதிலும் சிக்கல் இருக்காது.

மேலும் படிக்க...

PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!

English Summary: PM-kisan - All these people don't have a single penny - Central government warning!
Published on: 08 October 2022, 10:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now