பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 May, 2023 6:58 AM IST
PM kisan

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

பிஎம் கிசான் 14வது தவணை

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 13 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் 14ஆவது தவணைப் பணம் எப்போது விடுவிக்கப்படும் என்று பயனாளிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் பணம் வரும் தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த மே மாதத்திலேயே 14ஆவது தவணைப் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தில் எத்தனை பேருக்கு கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கும் நிதியுதவி பெறுவதற்கும் விவசாயிகளுக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். விவசாயியின் குடும்பங்களும் இதில் பயன்பெறலாம். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் குழைந்தைகள் அடங்கியது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் குடும்பத்தினர் அனைவரும் பயன்பெறலாம் என்ற சலுகையை வழங்கியுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் தகுதி கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே உண்டு.

இருவருமே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து ஆளுக்கு 6000 ரூபாய் நிதியுதவி பெற முடியாது. இந்த 6000 ரூபாய் என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய முழுக் குடும்பத்துக்கும் சேர்த்து வழங்கப்படுவதாகும். இதில் மனைவிக்கு தனியாக நிதியுதவி கிடைக்காது. சில குடும்பங்களில் கணவன் இல்லாமல் மனைவியே குடும்பத் தலைவராக இருப்பார்கள். அவர்கள் இத்திட்டத்தில் நிதியுதவி பெறலாம்.

மேலும் படிக்க

கஞ்சா விவசாயத்தை சட்டப்படி அனுமதிக்க அரசு ஆலோசனை: காரணம் இதுதான்!

PM கிசான்: இதுவரை பயன்பெறாத விவசாயிகள் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!

English Summary: PM Kisan: Do you know how many people in a family get money?
Published on: 03 May 2023, 06:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now