மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 February, 2021 9:51 AM IST
Deccan Herald

நடப்பு நிதியாண்டில் PM- கிசான் திட்டத்தின் கீழ் விரைவில் விவசாயிகளுக்கு ரூ.18,000 வழங்கப்பட உள்ளதாக பிஜேபி மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமீத் ஷா அறிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

70 லட்சம் விவசாயிகள் (70 lakh farmers)

இதை முன்னிட்டு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசுகையில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றால், பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை அமைத்தும் வழங்கப்படும்.

இதன் மூலம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 லட்சம் விவசாயிகளும், பிரதமரின் கிசான் (PM Kisan Yojana)திட்டத்தின் பயனை அடைவார்கள்.

ரூ.18,000

அப்போது நடப்பு நிதியாண்டுக்கான 6 ஆயிரத்துடன், முந்தைய ஆண்டுகளில் வழங்காமல் விடுபட்ட ரூ.12 ஆயிரம் சேர்த்து, மொத்தம் ரூ.18,000 வழங்கப்படும். இந்தத் திட்டத்தை ஆளும் மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தாததால், விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனினும் மத்திய அரசின் நெருக்கடிக்கு பிறகு, பிரதமரின் கிசான் திட்டத்தை செயல்படுத்த அண்மையில் மம்தா அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறது.

பல கோடி இழப்பு (Multi crore loss)

தேர்தலை முன்னிட்டு அரசில் கட்சிகள் விவசாயிகளைக் கவருவதற்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். ஆனால், இதுவரை விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தாததால், இம்மாநில விவசாயிகள் பல கோடி ரூபாயை இழந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.


பிரதமரின் கிசான் (PM- kisan Scheme)

பிரதமரின் கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் தகுதி (Farmers qualify)

அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிஎம் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள்.

மேலும் படிக்க...

பயிர் செழிப்பிற்கு புத்துயிர்ப் பெறும், பாரம்பரிய ஏர்க் கலப்பை உழவு முறை!

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

மாடுகளுக்கானக் கோடை காலப் பராமரிப்பு! எளிய டிப்ஸ்!

English Summary: PM Kisan: Farmers to be given Rs 18,000 this year - Amitsha Info!
Published on: 18 February 2021, 09:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now