வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்! உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட் cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன? குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 June, 2022 6:32 PM IST

பிஎம் கிசான் திட்டத்தில் நீங்கள் செய்யும் இந்தத் தவறுகளைச் செய்திருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இல்லையேல், உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வருவதில் சிக்கல் இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு அண்மையில் விடுவித்த 11ஆவது தவணைத் தொகை, பல விவசாயிகளுக்கு பணம் வரவில்லை. அதற்கான காரணம் இதுதான். உடனே சரிபண்ணுங்க..செய்யாவிட்டால் பிரச்னை உங்களுக்குத்தான்

மத்திய அரசின் திட்டம்

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தப் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

11ஆவது தவணை

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. கடைசியாக மே 31ஆம் தேதிதான் 11ஆவது தவணைப் பணம் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இதில் சுமார் 10 கோடிக்கு மேல் பயன்பெற்றனர். ஆனாலும் பல விவசாயிகளுக்கு இன்னும் நிதியுதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏன் பணம் வரவில்லை

பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் பலருக்கு நிதியுதவி வரவில்லை என்ற புகார் உள்ளது. அவர்கள் மத்திய அரசின் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் புகார் கூறுகின்றனர். ஆனால், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி வராமல் போவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. முதலில், தகுதியுடைய விவசாயிகளுக்கு மட்டுமே நிதியுதவி கிடைக்கும். அதேபோல, வேறு சில காரணங்கள்.

பெயர்

இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பயனாளியின் பெயர் சரியாக இருக்க வேண்டும். ஆதார் கார்டில் உள்ளதுபோலவே பயனாளியின் பெயர் விண்ணப்பத்தில் இருக்க வேண்டும். பெயரில் உள்ள சிறு தவறால் கூட (spelling mistake) பணம் வாராமல் போகலாம்.

முகவரி

பயனாளியின் பெயரைத் தொடர்ந்து முகவரி முக்கியம். ஆதார் கார்டில் உள்ள முகவரி விண்ணப்பத்திலும் இருக்க வேண்டும். ஒருவேளை பயனாளி தனது முகவரியை மாற்றியிருந்தால் அதை ஆதார் கார்டில் அப்டேட் செய்துவிட்டு அதன் பின்னர் பிஎம் கிசான் கணக்கிலும் மாற்ற வேண்டும்.

ஆதார் எண்

பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்கு ஆதார் கார்டுதான் முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு பணம் கிடைக்காது. ஆதார் நம்பர் தவறாக வழங்கப்பட்டிருந்தால் பணம் வராது. எனவே ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா, அதன் விவரங்கள் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மொழி

வட மாநில விவசாயிகள், தங்கள் பெயர் போன்ற விவரங்களை இந்தி மொழியில் பதிவிடுகின்றனர். இது தவறாகும். பெயர் போன்ற விவரங்களை ஆங்கிலத்தில் பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான் நிதியுதவி கிடைக்கும். இது இந்தியா முழுக்க செயல்பாட்டில் உள்ள திட்டமாகும். எனவே இந்தியில் பதிவிடுவது சரியாக இருக்காது.

கேஒய்சி அப்டேட்

விவசாயிகள் அனைவரும் தங்களது கேஒய்சி அப்டேட்டை முடிப்பது கட்டாயமாகும். கேஒய்சி அப்டேட்டுக்கு அரசு அவகாசம் வழங்கியுள்ளது. ஜூலை 31 வரை அந்த வேலையை முடிக்கலாம். கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காமல் இருந்தாலும் பணம் வராது. எனவே, இந்தத் தவறுகளை உடனடியாகத் திருத்தினால் நிதியுதவியைத் தொடர்ந்து பெறலாம்.

மேலும் படிக்க...

ரேசன் கடை ஊழியர்களுக்கு 14%அகவிலைப்படி உயர்வு- தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் யூரியாத் தட்டுப்பாடு- குறுவை சாகுபடியில் சிக்கல்!

English Summary: PM-kisan farmers will not get money- Correct this mistake immediately!
Published on: 17 June 2022, 10:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now