Farm Info

Thursday, 04 March 2021 09:48 AM , by: Daisy Rose Mary

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பிஎம் கிசான் FPO திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனிநபர் அல்லாமல் விவசாயிகளின் குழு முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.15 லட்சம் வரை மத்திய அரசு வழங்குகிறது.

விவசாய குழுக்களுக்கு ரூ.15 லட்சம்

இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பிஎம் கிசான் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் திட்டம். புதிய வேளாண் மசோதா அறிமுகம் செய்யப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு மற்றொரு சலுகைத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது வேளாண் தொழிலைத் தொடங்குவதற்காக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

பிஎம் கிசான் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் திட்டம் (PM kisan FPO yojana)

PM kisan FPO yojana திட்டத்தின் கீழ் வேளாண் உற்பத்தி மையங்களுக்கு நிதி கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு 11 விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரு வேளாண் நிறுவனத்தை அமைக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் உரம், விதை, வேளாண் மருந்துகள், வேளாண் உபகரணங்கள் போன்றவற்றை வாங்கலாம்.

ரூ.6865 கோடி ஒதுக்கீடு

2024ஆம் ஆண்டு வரையில் FPO திட்டத்துக்காக மொத்தம் ரூ.6,865 கோடியைச் செலவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பல்வேறு தவணைகளாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். அவை குறிப்பிட்ட காலஅவகாசத்தில் திரும்ப செலுத்த வேண்டும்.

திட்டத்தின் பயன்கள்

  • தனிநபர் விவசாயி அல்லாமல் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கும் திட்டம்,

  • விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் நோக்கத்தில்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • இந்த திட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்படும்.

PM கிசான் FPO திட்டம் 2020 க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

PM Kisan FPO திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் உங்கள் பகுதிகளில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பைத் தொடர்பு கொண்டு, தங்களை இணைத்துக்கொள்ளலாம். அல்லது இணையதளம் வாயிலாகவும் இந்தத் திட்டத்தில், விவசாயிகள் இணையும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இதற்கான முன்பதிவு ஆன்லைனில் இதுவரைத் தொடங்கவில்லை. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. அறிவிப்பு வெளியானதும், விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு ரூ.5000 வரை ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்யும் அரசு திட்டங்கள்!

லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)