Farm Info

Monday, 01 May 2023 11:34 AM , by: R. Balakrishnan

PM Kisan

பி.எம் கிசான் 14வது தவணைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். பிரதமர் கிசான் யோஜனாவின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் விடுவித்தார். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.6,000 தலா ரூ 2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 2 ஹெக்டேர் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. பின்னர், அனைத்து சிறு நில உரிமையாளர் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

பிஎம் கிசான் (PM Kisan)

சமீபத்தில் 13-வது தவணைக்கான தொகை அனைவருக்கும் விடுவிக்கப்பட்டது. 14வது தவணைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பம்

  • விவசாயிகள் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரை பதிவு செய்ய முதலில் www.pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  • பின்னர், முகப்புப் பக்கத்தில், 'Farmers Corner' என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து, 'New Farmers Registration' என்பதைக் கிளிக் செய்யவும். உங்களுக்காக ஒரு பதிவு படிவம் இப்போது திறக்கப்படும்.
  • அதில் அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, 'Submit' என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பெயர் பதிவாகிவிடும். எதிர்கால குறிப்புக்காக அந்த நகலை சேமித்து வைக்க வேண்டும்.

மேலும் படிக்க

பிஎம் கிசான் திட்டம்: மத்திய விவசாய அமைச்சர் வேண்டுகோள்!

கஞ்சா விவசாயத்தை சட்டப்படி அனுமதிக்க அரசு ஆலோசனை: காரணம் இதுதான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)