மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள இந்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான PM-Kisan தவணைத்தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
பட்ஜெட் தாக்கல் (Budget)
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், அந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்வது வழக்கம். அதன்படி 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொது-பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதைமுன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.இதற்காக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
சமாதானப்படுத்தும் முயற்சி (Trying to convince)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனவும் அவை, ஒன்றரை மாதமாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சமாதானப்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது. இதில் நீர் பாசனத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் அதிகரிக்கப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000 ஆயிரம் ரூபாய், அதாவது மாதம் 500 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை தலா ரூ.2000 வீதம், 3 தவணைகளாக அளிக்கப்படுகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு (Increase in financial allocation)
PM Kisan திட்டத்திற்கு கடந்த 2019-20ம் நிதியாண்டில் ரூ.1.51 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, 2020-21ம் நிதியாண்டில் ரூ.1.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.
எனவே இம்முறையும் நிதி ஒதுக்கீட்டை உயர்த்தித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பயிர்களுக்கான சாகுபடிப் பணிகளுக்கு ரூ.6000 போதாது என பல விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. எனவே இதனைக் கருத்தில்கொண்டு, PM- Kisan தவணைத்தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் விபரங்களுக்கு https://pmkisan.gov.in/ என்ற லிங்க்-கில் பார்க்கவும்.
மேலும் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.60,000பின்னேற்பு மானியம்!
கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள்- விற்பனைக்குத் தயார்!!
நெருங்கி வருகிறது தைப் பொங்கல் - தொடர் மழையால் மண்பானைகள் தயாரிப்பு பாதிப்பு!