Farm Info

Saturday, 28 May 2022 04:45 PM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 11ஆவது தவணைத் தொகை அடுத்த வாரம் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. அவ்வாறு விண்ணப்பித்த உங்கள் வங்கிக்கணக்கில் பணம் வராவிட்டால், இந்த தொலைப் பேசி எண்களில் புகார்கள் அளிக்கலாம்.

பிஎம் கிசான் திட்டம்

மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நலத்திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

தகுதி

பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

11-வது தவணை

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 11ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாகவே பணம் வரும் தேதி தொடர்பான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இன்னும் விவசாயிகளுக்கு நிதியுதவி விடுவிக்கப்படவில்லை.

பணம் வரும் தேதி

இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 11ஆவது தவணைத்தொகை மே 31ஆம் தேதி, அதாவது அடுத்த வாரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜூன் மாதத்திலிருந்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் சிலருக்கு தங்களுக்கு நிதியுதவி கிடைக்குமா அச்சம் இருக்கிறது. பிஎம் கிசான் கணக்கில் பயனாளியின் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் நிதியுதவி வராமல் போக வாய்ப்பு உள்ளது. அதைச் சரிபார்க்க pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கலாம். அதிலுள்ள 'Beneficiary Status' என்ற ஆப்சனில் இதுகுறித்து தெரிந்துகொள்ளலாம்.

புகார் அளிக்க

ஒருவேளை தகுதியுள்ள விவசாயிகளுக்கு பணம் வராவிட்டால் கீழ்க்காணும் எண்களில் புகார் கொடுக்கலாம்.

பிஎம் கிசான் டோல் ஃபிரீ நம்பர்: 18001155266

பிஎம் கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 155261

லேண்ட் லைன் நம்பர்கள்: 011—23381092, 23382401

பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606

மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109

மேலும் படிக்க...

முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?

மாட்டுக் கொட்டகைக்கு 100 % மானியம்- விபரம் உள்ளே!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)