விவசாயிகளின் நலனுக்காக பல மாநிலங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளை நிதி ரீதியாக மேலும் வலுப்படுத்தும் வகையில், பிஎம்-கிசான் உள்ளிட்ட அனைத்து மத்திய திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்துமாறு யூனியன் பிரதேசங்களை (UTs) மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாய அமைச்சர் வேண்டுகோள்
அனைத்து நலத் திட்டங்களையும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று கூறி அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நரேந்திர சிங் தோமர் தலைமையில் தேசிய தலைநகர் டெல்லியில், விவசாயத் துறையின் விரிவான வளர்ச்சிக்காக யூனியன் பிரதேசங்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. நாட்டின் அனைத்து துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் மூலம் பிரதமர் மோடி முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அந்தக் கூட்டத்தில் தோமர் கூறினார்.
அனைத்து விவசாயிகளுக்கும்
யூனியன் பிரதேசங்களிலும் அரசின் இந்த திட்டங்கள் 100 சதவீதம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். அங்குள்ள அனைத்து விவசாயிகளும் நலத்திட்ட பலன்களைப் பெற வேண்டும். கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உள்ளிட்ட இதர திட்டங்களின் பயனை தகுதியுடைய விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் மீனவர்கள் அனைவரும் பெற வேண்டும்.
மற்ற மாநிலங்களுக்கு இணையாக இந்தப் பகுதிகளும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும். யூனியன் பிரதேசங்களின் சிறு விவசாயிகளின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் வர வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் கூறினார்.
பிஎம் கிசான் திட்டம் (PM Kisan)
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் இந்த விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மூன்று முறை தலா ரூ. 2,000 என ஆண்டுக்கு ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் இனி புதிய வசதி: ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அமல்!