பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இவர்களுக்கெல்லாம் நிதியுதவி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தவறுகளை உடனடியாகத் திருத்த வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலும், நிதிச்சுமையை அவர்கள் எதிர்கொள்ள உதவும் விதமாகவும் மத்திய அரசு பலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் PM-kisan திட்டம்.
ரூ.6000 நிதி
மத்திய அரசு சார்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகள் ஒரு ஆண்டில் கிடைக்கின்றன.
அடுத்த தவணை
பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 11ஆவது தவணை மே 31ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் வரவிருக்கிறது. ஆனால் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் குறிப்பிட்ட சில விவசாயிகளின் தவணை வராமல் போகிறது.
பணம் கிடைக்காது
உண்மையில், PM-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் இவற்றில் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஏனெனில் அவற்றில் பல தவறுகள் உள்ளன. இதனால் இந்த விவசாயிகளின் தவணை நிறுத்தப்படுகிறது. வங்கி விவரங்கள் முதல் பெயர், ஆதார் வரை பல்வேறு பிழைகள் உள்ளன. சில சமயங்களில் பெயர்கள் தவறாகவும், சில சமயங்களில் ஆதார் அட்டையுடன் விவரங்கள் பொருந்தாமலும் இருக்கும். இதுபோன்ற சூழலில் பணம் வராது.
கவனம் தேவை
-
PM-kisan திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:-
படிவத்தை பூர்த்தி செய்யும் போது, உங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதவும்.
விண்ணப்பத்தில் இந்தியில் பெயர் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் பதிவிட வேண்டும்.
-
விண்ணப்பத்தில் உள்ள பெயரும், வங்கிக் கணக்கில் உள்ள விண்ணப்பதாரரின் பெயரும் வெவ்வேறாக இருந்தால், உங்கள் பணம் வராமல் போகலாம்.
-
IFSC குறியீடு, வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கியின் கிராமப் பெயர் ஆகியவற்றை எழுதுவதில் தவறு இருந்தாலும், உங்கள் தவணைப் பணம் வராது.
-
சமீபத்தில், வங்கிகளின் இணைப்பு காரணமாக IFSC குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர் தனது புதிய IFSC குறியீட்டை புதுப்பிக்க வேண்டும்.
-
pmkisan.gov.in வெப்சைட்டிலேயே நீங்கள் இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!