பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 12-வது தவணை நிதியை பிரதமர் அக்டோபர் 17 அன்று விடுவித்தார்.
பிஎம் கிசான் (PM Kisan)
விவசாய பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.16,000 கோடி அளவிலான தொகை அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாய பயனாளிகள் 13-வது தவனை பெற eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே விவசாயிகள் விரைவாக eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். eKYC செயல்முறையை மேற்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
eKYC இணைப்பது எப்படி.?
முதலில், விவசாயிகள் PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள 'e-KYC' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும். அதை உள்ளிட்ட பிறகு 'Get OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது, OTP ஐ உள்ளிட வேண்டும். அதன் பின்னர் PM-Kisan e-KYC வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு விடும். பயோமெட்ரிக் முறையில் e-KYC செய்ய ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க
வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!
யூரியா வாங்க ரூ.2700 மானியம்: விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசு!