பிஎம் கிசான் திட்டத்தின் 11-வது தவணைத் தொகை, அடுத்த மாதம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மார்ச் மாதம் அந்தத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
பிஎம் கிசான் திட்டம்
இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-kisan) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
11-வது தவணை
பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இப்போது 11ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். 11வது தவணையை அடுத்த மாதம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதி
பல விவசாயிகளின் கணக்குகளில், FTO உருவாக்கப்பட்டு, பணம் செலுத்துவதற்கான நிலை நிலுவையில் உள்ளது. FTO என்பது Fund Transfer Order. உங்களுடைய கணக்கிலும் இப்படி உள்ளதா என்பதை உடனடியாக உறுதி செய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லையெனில் அடுத்த மாதம் உங்கள் கணக்கில் பணம் வராமல் போக வாய்ப்புள்ளது.
மேலும் பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகள் இ-கேஒய்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. PM Kisan வெப்சைட்டில் சென்று, எந்தவொரு விவசாயியும் தனது ஆதார் எண், மொபைல் நம்பர் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு தங்களுடைய ஸ்டேட்டஸ் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க...