பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
பிஎம் கிசான் (PM Kisan)
இந்த 6000 ரூபாய் தொகை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் காலாண்டுக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 12 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. கடைசியாக 12ஆவது தவணை தீபாவளிக்கு முன்பாக விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அடுத்து பிரதமர் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணை தொகைக்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த சூழலில், வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இதுகுறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 100% மத்திய அரசால் வழங்கப்படுகிறது. குறு, சிறு விவசாயிகள் அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கிறது.
மேலும் படிக்க
பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!