பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது மத்திய அரசால் நடத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 12 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 13ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பிஎம் கிசான் (PM Kisan)
ஒருவேளை நீங்களும் பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளியாக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பெரிதும் பயன்படும். ஏனெனில், அடுத்த தவணைப் பணம் விரைவில் வரவுள்ளது. உண்மையில், இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டின் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், மூன்றாவது தவணைக்கான பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை. அதன்படி, பிஎம் கிசான் திட்டத்தின் 13வது தவணை டிசம்பர் மாதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், அதை விரைவில் தீர்க்கவும். ஏனெனில் பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம். இதற்கு, ஹெல்ப்லைன் எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது மெயில் ஐடியில் அஞ்சல் மூலமாகவோ தீர்வைப் பெறலாம்.
ஹெல்ப் லைன் (Helpline)
ஹெல்ப்லைன் எண்- 155261, 1800115526 அல்லது 011-23381092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் ஐடி - pmkisan-ict@gov.in
இத்திட்டத்தில் நீங்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவுசெய்யலாம்.
மேலும் படிக்க