Farm Info

Thursday, 13 May 2021 10:06 AM , by: Elavarse Sivakumar

விவசாயிகள் தங்களது பொருளாதாரத் தேவைக்காகக் கடன் வாங்க வேண்டிய சூழலில், குறிப்பிட்டக்காலத்திற்கு வட்டி கட்ட வேண்டிய இக்கட்டை எதிர்கொள்கின்றனர்.

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card)

இந்த இடர்பாட்டில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்ததுதான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம்.

PM Kisan Yojana

பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல உதவிகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசு முயற்சி (Federal government effort)

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், இந்த திட்டத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டுகளை (Kisan credit card) வழங்குவதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது.

2.5 கோடி விவசாயிகளுக்கு

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல், இந்த திட்டத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டுகளை (Kisan credit card) வழங்குவதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு நடத்தி வருகிறது. கிசான் கிரெடிட் கார்டை பிரதமர் கிசான் யோஜனாவுடன் (PM Kisan Yojana) இணைத்த பின்னர், 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

ரூ. 2 லட்சம் கோடி

இந்த திட்டத்தில் இதுவரை 1.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் கார்டுகள் (Kisan Credit Card) வழங்கப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் பயன் அடையும் வகையில் இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் கடனாக 2 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)

கிசான் கிரெடிட் கார்டைப் பெற இப்போது விவசாயிகள் ஒரு பக்க படிவத்தை மட்டுமேப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்தப் படிவத்தை pmkisan.gov.in வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக எவ்வித KYC செய்ய விவசாயிகள் தேவையில்லை.

தகுதி (Qualification)

இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கும் விவசாயி 60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களும் , இணை விண்ணப்பதாரர் தேவைப்படுவார்கள்.

கடன் மற்றும் வட்டி (Loan and interest)

கிசான் கிரெடிட் கார்டின் கீழ், ஒரு விவசாயி விவசாயத்திற்கு ரூ .3 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கான வட்டி விகிதம் 4 சதவீத ஆகும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (Who can apply?)

விவசாயிகளுக்கு கூடுதலாக, கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள் கிசான் கடன் அட்டையின் கீழ் விவசாயக் கடன்களுக்கும் விண்ணப்பிக்கலாம். கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்கள் 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம்.

மேலும் படிக்க...

கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!

முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

தென்னை மரங்களுக்கு இடையில் பசுந்தீவன சாகுபடி! இனி தீவனத் தட்டுப்பாடு இல்லை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)